உலகின் புதிய எத்தனால் கார் இந்தியாவில் அறிமுகம்!! அமைச்சர் பெருமிதம்!!

 
இன்னோவா

இன்னோவா கார் நிறுவனம்  100% எத்தனால் எரிபொருளை நிரப்பி இயக்கும் வகையில் 2.0 லிட்டர் ஃப்ளெக்ஸ் எரிபொருளுக்கான ஹைப்ரிட் எஞ்சினை பயன்படுத்தி கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.   இந்த கார் அறிமுக விழாவில் உரையாற்றிய நிதின்கட்காரி, "திறன் வாய்ந்த எத்தனால் உற்பத்தியாளர்களின் மூலம்   3 மாதங்களுக்குள் இந்தியா 20% எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டு இலக்கை எட்டிவிடும்.  எத்தனால் உற்பத்தியில் உலகின் நம்பர் 1 உற்பத்தியாளராகவும் இந்தியா மாறிவிடும்” எனக் கூறினார்.  கார்கள், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் அனைத்தும் 100% எத்தனாலில் இயங்கும் வழி வகைகள் மேற்கொள்ளப்படும் என   நிதின் கட்கரி தெரிவித்தார். 

இன்னோவா


எத்தனால் என்பது கரும்பு, சோளம், மக்காச்சோளம் மற்றும் பார்லி போன்ற விவசாய கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க எரிபொருள்.  மற்ற புதைபடிவ எரிபொருட்களுடன் ஒப்பிடும்போது எத்தனால் ஒரு செலவு குறைந்த எரிபொருளாக உள்ளது.   விவசாயக்  கழிவுகளில் இருந்தும் 2G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கலாம் .  பெட்ரோலுடன் ஒப்பிடும்போது எத்தனால்  காரின் சக்தி மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் .  பெட்ரோலுடன் ஒப்பிடும்போது எத்தனால் எரிபொருளின் விலையும் குறைவாக உள்ளது.  

நிதின் கட்காரி


ஒரு வாகனத்தின் இயந்திரத்தை   பெட்ரோலில் 20%க்கும் அதிகமான எத்தனால் கலந்து பயன்படுத்துவது ஃப்ளெக்ஸ் எரிபொருள் தொழில்நுட்பம் என கொள்ளப்படுகிறது.   பிரேசில் 48 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் நாடாக உள்ளது. இந்தியாவில் உள்ள பல OEMகள் தங்கள் வாகனங்களை E20 எரிபொருள் பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்றத் தொடங்கியுள்ளன. 2025ல்  20% எத்தனால் கலந்த எரிபொருளை பயன்பாட்டை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே E20 எரிபொருள் நாடு முழுவதும் 3,300 இடங்களில் கிடைக்கிறது. சமீப காலங்களில், இந்தியாவில் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு 2013-14 ல் 1.53% ஆக இருந்து மார்ச் 2023 ல் 11.5% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் எண்ணெய் இறக்குமதி செலவில்ரூ 41,500 கோடி ரூபாய் குறைய வழிவகுத்துள்ளதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web