வைரல் வீடியோ... ஒரே நிமிடத்தில் 77பாட்டில் மூடிகளை தலையால் திறந்து கின்னஸ் சாதனை!

 
முகமது ரஷீத்

சாதனை என்பதே முறியடிப்பதற்காக தான் செய்யப்படுகிறது என்பதே உண்மை. எதிலும் சாதனை படைக்கலாம் என்பதை தான் அடுத்தடுத்து சாதனையாளர்கள் நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் தலையால் மூடியை திறந்து   முகமது ரஷீத்  புதிய உலக சாதனை  படைத்துள்ளார்.இந்த சாதனையில்  மேஜையின்  முனைப் பகுதியில் பாட்டில்களை இறுக பிடித்து கொண்டு  மூடிகளை   தலையால் விரைவாக முட்டி  நீக்கி விடுகிறார்.


அவருடைய உதவியாளர்கள் வரிசையாக பாட்டில்களை  ஒன்றன் பின் ஒன்றாக  அனுப்பி கொண்டே இருக்கின்றனர். நொடிப்பொழுதில்   பாட்டிலின் மூடிகளை தலையால் நீக்கிவிடுகிறார் முகம்மது ரஷீத். இந்த சாதனையில் ரஷீத்   77 பாட்டில் மூடிகளை ஒரே நிமிடத்தில் நீக்கிவிட்டார்.  2023  பிப்ரவரியில் இந்த சாதனையை  படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.  சமீபத்தில் தான் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது.

முகம்மது ரஷீத்

இது பதிவிடப்பட்டதும்  17 லட்சம் பேர் அதனை பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டு   வருகின்றனர்.  2020ல்  இந்திய தற்காப்பு கலை நிபுணர்  பிரபாகர் ரெட்டி ஒரே  நிமிடத்தில் 68 பாட்டில் மூடிகளை நீக்கியது தான்  சாதனையாக இருந்த நிலையில் தற்போது முகம்மது ரஷீத் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web