ஞானவாபியில் வழிபாடு... முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எச்சரித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்... பரபரப்பு வீடியோ!

 
ஞானவாபி மசூதி

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு வாரணாசி ஞானவாபி  மசூதி விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இங்கு உள்ள   பாதாள அறையில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் பெரும் பேசுபொருளாகி வருகின்றன. இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்  சித்திக் குல்லா சவுத்ரி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வங்காளத்திற்கு வந்தால் அவரை சுற்றி வளைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.   வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில்அமைந்துள்ள சிலைகளுக்கு இந்து மத பிரார்த்தனைகளை அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து   திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் சித்திக் குல்லா சவுத்ரி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் "வங்காளத்திற்கு வந்தால் அவரை சுற்றி வளைப்போம்" என எச்சரித்துள்ளார்.  இந்துமத வழிபாட்டாளர்கள் "உடனடியாக ஞானவாபி மசூதியை காலி செய்ய வேண்டும்" எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.  


மசூதியில் இந்து மத  பூஜையை தடை செய்ய வேண்டும் என கொல்கத்தாவில்பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்த  ஜமியத் உலமா-இ-ஹிந்த் பேரணியில் கலந்து கொண்ட பிறகு சவுத்ரி, இந்த எச்சரிக்கையை பதிவு செய்துள்ளார்.  ஏற்கனவே ஞானவாபி மசூதியில்  இந்து வழிபாட்டாளர்கள்  அங்கு வழிபாடு நடத்த தொடங்கியுள்ளனர். தயவு செய்து  உடனடியாக ஞானவாபி மசூதியை காலி செய்யுங்கள்" எனவும் கூறியுள்ளார்.  இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மேலும் "நாங்கள் எந்த கோவிலுக்கும் பிரார்த்தனை செய்ய செல்வதில்லை".  அப்படியிருக்க இந்து மதத்தினர்   எதற்காக எங்கள் மசூதிகளுக்கு வருகிறார்கள்? மசூதி என்றால் ஒரு மசூதி. யாராவது மசூதியை கோவிலாக மாற்ற நினைத்தால்  அதனை பொறுத்துக் கொள்ள முடியாது. அதுவரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்,  அது நடக்க வாய்ப்பே இல்லை. இந்த ஞானவாபி மசூதி  சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேலாக அதே இடத்தில் இருந்து வருகிறது. இதனை எப்படி இடிக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.   இது குறித்து  மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், டிஎம்சி மேலாளரும் முதல்வருமான மம்தா பானர்ஜியின் தலைமையில் மேற்கு வங்கம் "ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பாதுகாவலராக மாறியுள்ளது" எனக் கூறியுள்ளார்.  

ஞானவாபி

 யோகி ஆதித்யநாத் ஒரு சனாதானி மகன். மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் அமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு மிரட்டல் விடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.  யோகி செல்வதைத் தடுக்க அவர்களுக்கு தைரியம் இல்லை” என பதில் அளித்துள்ளார்.  அதே நேரத்தில்  ஞானவாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் உள்ள  இந்து மத சிலைகளுக்கு   பூஜை செய்யலாம் என்ற வாரணாசி மாவட்ட நீதிமன்றம்   ஜனவரி 31 ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த மனுவின் மீதான விசாரணை பிப்ரவரி 15ம் தேதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில்   சவுத்ரியின் எச்சரிக்கை வந்தது .
இந்த மனுவில்   1993ல்  அதிகாரிகளால் பாதாள அறையை மூடும் வரை பாதிரியார் சோம்நாத் வியாஸ் தான் அங்கு பூஜை செய்து வந்தார். தற்போது  சோம்நாத் வியாஸின் தாய்வழி பேரன் சைலேந்திர குமார் பதக், அங்குள்ள தெய்வங்களை வழிபடும் உரிமையை கோரியுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web