அதிர்ச்சி வீடியோ... டெய்ரி மில்க் சாக்லெட்டில் நெளியும் புழு.. . வாடிக்கையாளர் வேதனை!

 
டெய்ரிமில்க்

 
சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் மிகமிகக் குறைவு. இதனால் ஆரோக்கியம் மேம்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக்கும் வகையில் விதம் விதமான சாக்லேட்டுகள் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.  அதிலும் சில பிராண்டட் சாக்லேட்டுகளுக்கு சந்தையில் எப்போதும் மவுசு அதிகம்.  அதே போல்  பிரபல காட்பரீஸ் நிறுவனத்தின் தயாரிப்பான டெய்ரி மில்க் சாக்லேட்டில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர்  புகார் தெரிவித்துள்ளார். 
ஹைதாராபாத்தில் வசித்து வரும்   ராபின் சாக்கியஸ் என்ற வாடிக்கையாளர் ஆசை ஆசையாக சாப்பிடுவதற்கு  பிரபல காட்பரீஸ் நிறுவனத்தின் தயாரிப்பான டெய்ரி மில்க் சாக்லேட்டை அவர் கடையில் வாங்கி வந்தார்.  ருசிப்பதற்காக திறந்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளார்.  


 



அந்த சாக்லேட்டில் உயிருடன் நெளியும் புழுக்களைக் கண்டதும் பதறிவிட்டார்.  இது குறித்து தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  பிரபல நிறுவனத்தின் தயாரிப்பை நம்பிக்கையோடு வாங்கியும் தான் ஏமாந்ததாக உணர்ந்தார். இதே போன்று புழுக்கள் நெளியும் சாக்லேட்டுகளை உண்ணத் தலைப்படும் குழந்தைகளை காப்பாற்றவே இந்த பதிவை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.  தனது கசப்பான அனுபவத்தை அவர் பதிவாக வெளியிட்டார்.
ஹைதராபாத்  அமீர்பேட் மெட்ரோ ரயில் நிலையத்தில்  தானியங்கி ஒன்றில் வாங்கிய அந்த சாக்லேட்டில் உயிருடன் புழு நெளிந்ததை   வீடியோவாக பதிவிட்டார்.  சாக்லேட் வாங்கியதற்கான பில்லையும் இணைத்துள்ளார்.   " அந்த பதிவில் இன்று அமீர்பேட் மெட்ரோவில் வாங்கிய காட்பரி சாக்லேட்டில் ஒரு புழு ஊர்ந்து கொண்டிருந்தது. காலாவதியாகும் இந்த தயாரிப்புகளுக்கு தரப்பரிசோதனைகள் எதுவுமே இல்லையா? இதற்கு யார்  பொறுப்பு?" எனக்  கேள்வி எழுப்பியுள்ளார்.  

டெய்ரிமில்க்
இந்தப் பதிவு உடனடியாக ட்விட்டரில் வைரலாகி வருகிறது.   ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் இதற்கு தங்களது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.    இந்த வைரல் பதிவுக்கு பதிலளித்த ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன், பொது இடங்களில் குறைபாட்டுடன் விற்பனை செய்யப்படும்  சாக்லேட்டுகள் குறித்த   விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.  டெய்ரி மில்க் சாக்லெட்டுகளை தயாரிக்கும் காட்பரீஸ் நிறுவனம், தங்கள் தரப்பு குறையை ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web