எழுத்தாளர் ஜெயமோகன் மகனின் திருமண வரவேற்பு.. சினிமா பிரபலங்கள் வாழ்த்து!

 
அஜிதன்

தமிழ்த் திரையுலகில்   பிரபலமான பல படங்களுக்கு வசனம் எழுதி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் நான் கடவுள், அங்காடித் தெரு, நீர்ப்பறவை, கடல், 6 மெழுகுவத்திகள், காவியத் தலைவன், பாபநாசம்,சர்கார், 2.0, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன், விடுதலை பாகம் 1 போன்ற படங்களுக்கு வசனம் எழுதி திரைக்கதையிலும்  பெரும் பங்கு வகித்தவர்.   ஜெயமோகன்  மணிரத்னம், ஷங்கர், பாலா,கௌதம் வாசுதேவ் மேனன், வஸந்த், ஏ.ஆர்.முருகதாஸ் வசந்தபாலன், சீனு ராமசாமி, வெற்றிமாறன்  போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களில் பணிபுரிந்தவர்.  தமிழில் மட்டுமல்லாது மலையாளப் படங்களிலும் இவ்விதத்தில் பணிபுரிந்து வருபவர்.   இப்போது இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 , சீனுராமசாமியின் இடிமுழக்கம் படங்களில் பணிபுரிந்து வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் மகன்   அஜிதனுக்கும் கோவை B. ரமேஷ் -சுந்தரி தம்பதியரின் மகள் மீனாட்சி என்ற தன்யாவுக்கும் கோவையில் திருமணம் நடத்தப்பட்டது.  

அஜிதன்


இவர்களின் வரவேற்பு விழா சென்னை ஹயாத் ஓட்டலில்  பிப்ரவரி 24ம் தேதி   மாலை நடைபெற்றது. இந்த வரவேற்பு விழாவில்  நடிகர்கள் சிவகுமார், விஜய் சேதுபதி, குமாரவேல்,இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், பாலா, வஸந்த் ,ஏ .ஆர் . முருகதாஸ் ,கௌதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி,வசந்தபாலன், மிஷ்கின், சீனுராமசாமி,சுப்பிரமணிய சிவா, மித்ரன் ஜவஹர், சுகா, தனா , ஒளிப்பதிவாளர்  செழியன் , பொன்னியின் செல்வன் படப் பாடல் ஆசிரியர் இளங்கோ கிருஷ்ணன் , இணை, துணை இயக்குநர்கள் உட்பட  ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.  

அஜிதன்

மேலும்  மதுரை பாராளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன், கவிஞர்கள் மனுஷ்ய புத்திரன், ரவி சுப்பிரமணியன், எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன்,சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர், அ.வெண்ணிலா, இரா. முருகன், பா.ராகவன், லட்சுமி சரவணகுமார்,  ஷாஜி,  சந்திரா தங்கராஜ்,பத்திரிகையாளர்கள் அந்திமழை கா. அசோகன், ஆனந்த விகடன் நா.கதிர்வேலன் , வழக்கறிஞர் ஆர். சுமதி , மொழிபெயர்ப்பாளர் லதா அருணாசலம் , ஆட்சிப்பணி அதிகாரிகள் உட்பட  பல்வேறு துறைகளின்  பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.   ஜெயமோகன் நாவல்கள் ,சிறுகதைகள்,அரசியல் ,ஆன்மிகம், தத்துவம் என 150 க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதி  விருதுகளை வென்றவர்.  சுமார் 25000  பக்கங்களில் இவர் எழுதிய வெண்முரசு நாவல் வாசகர்களிடம்  பெரும் வரவேற்பினை பெற்றது.   அஜிதனும்  தந்தை ஜெயமோகனைப் போலவே ஓர் எழுத்தாளர். தற்போது   இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web