24 *7 மணி நேரமும் ஷாருக்கானுடன் 6 துப்பாக்கி ஏந்திய போலீசார்... ஒய் பிளஸ் பாதுகாப்பு... !!

 
ஷாருக்கான்

 பாலிவுட் திரையுலகில் பாலிவுட் பாட்ஷாவாக கொண்டாடப்படுபவர்   ஷாருக்கான் . சமீபத்தில் இவரது நடிப்பில் பதான், ஜவான்  இரு படங்கள் வெளியாகி  பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்துள்ளது.  இந்தத் திரைப்படங்கள் ரூ 1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது.இதன் மூலம் ஒரே ஆண்டில் ரூ 1000 கோடி வசூலை அள்ளிய ஹீரோ என்ற பெருமையை ஷாருக்கான் பெற்றுள்ளார். இந்த இரு படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது டங்கி எனும் திரைப்படத்தில் ஷாருக் கான் நடித்து வருகிறார்.

ஷாருக்கான்


இந்த திரைப்படம்  ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் நடைபெற்று வருகிறது  ஹிராணி  டிசம்பர் 22 ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் அடிப்படையில் ஷாருக்கானுக்கு   ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி  ஷாருக்கானுடன் எப்போதும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் 6 பேர் உடனிருப்பார்கள். இந்தியா முழுவதும் அவர் எங்குச் சென்றாலும் இந்த 6 பேரும் அவருடனே செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

ஷாருக்கான்

அத்துடன் 24*7 மணி நேரமும் ஷாருக்கானின் வீட்டிற்கு 4 ஆயுதம் ஏந்திய போலீஸார் எப்போதும் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்ட வண்ணம் இருப்பர். ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டுள்ள ஒய் பிளஸ் பாதுகாப்பில் எம்பி 5 இயந்திர துப்பாக்கிகள், ஏகே 47 ரக துப்பாக்கிகள், க்ளோக் பிஸ்டல்களும் இருக்கும்  இரு படங்களின் வெற்றியை கருத்தில் கொண்டே ஷாருக்கின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக விஐபி பாதுகாப்புக்கான சிறப்பு ஐஜி திலீப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web