3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க!

 
வெயில்

இந்தியாவின் பல பகுதிகளில் இப்போதே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. மழைக்காலங்களில் பெருமழை, வெயில் காலங்களில் சுட்டெரிக்கும் வெயில் என காலநிலை வெகுவாக மாறத் தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் கேரளாவிலும்  கோடைகாலத்திற்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது.  இதன் காரணமாக, திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு  மாவட்டங்களுக்கு  மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இங்கு வழக்கத்தைவிட  4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெயில் பெண்கள்

எப்போதும் ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் என்பதால் அந்த மாதங்களில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை இருக்கும். அதுவும் பாலக்காடு, புனலூர்  பகுதிகளில் மட்டுமே  அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே கேரளா முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது.

வெயில் மாஸ்க் மாணவிகள் இளம்பெண்கள்

அத்துடன்  மாநிலத்தின் முக்கிய பகுதிகளான திருவனந்தபுரம், கோட்டையம், ஆலப்புழா, கோழிக்கோடு, கண்ணூர், புனலூர் பாலக்காடு உட்பட   பல்வேறு பகுதிகளிலும் தனது சில தினங்களாக 37 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை நிலவி வருகிறது.   திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு   மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே காலை 11 மணி முதல்  3 மணி வரை அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம். அதிலும் குழந்தைகள், முதியவர்கள், இணைநோய் இருப்பவர்கள் மேலும் எச்சரிக்கையாக இருக்கும்படி  கேரளா சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web