இன்று கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ அலர்ட்!
இன்று தமிழகத்தில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதன்படி வானிலை மையம் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கை படி, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் அதே மாதிரி வளிமண்டல சுழற்சி உள்ளது. இதனால், அக்.14 முதல் அக்.19 வரை தமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று அக்.14ம் தேதி: கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை.
நாளை அக்.15: திருநெல்வேலி மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த 13 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வரும் அக்.17ம் தேதி வெள்ளிக்கிழமை சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), ஆயிங்குடி (புதுக்கோட்டை), தென்காசி, அம்முண்டி (வேலூர்) ஆகிய இடங்களில் தலா 80 மிமீ. மழை பதிவாகியுள்ளது. தென்காசி, வாலாஜா, நாங்குநேரி, விரிஞ்சிபுரம் ஆகிய இடங்களில் 70 மிமீ, வேலூர், கடலூர், ஆற்காடு, அரண்மனைப்புதூர் உள்ளிட்ட இடங்களில் 60 மிமீ மழை பதிவானது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
