செம... இனி சொகுசு ஆடம்பர கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம்.. அதிரடி அறிவிப்பு!!

 
சொகுசு கார்

இந்தியாவில் தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் எந்த வகையான காராக இருந்தாலும் வாடகைக்கு பயன்படுத்தலாம். தமிழகத்தை பொறுத்துவரை குறிப்பிட்ட வகை கார்கள் மட்டும் மஞ்சள் போர்டாக பதிவு செய்ய முடியும். தற்போது அந்த நிலையை மாற்றி   சொகுசு மற்றும் ஆடம்பர கார்களை வாடகைக்கு பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை ஸ்விப்ட், மாருதி சுசுகி, டாடா இண்டிகோ மற்றும் வேகன் ஆர் கார்கள் மட்டுமே  மஞ்சள் போர்டுடன் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சொகுசு கார்


தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  அதன்படி, சொகுசு கார்கள் உட்பட  அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக    பதிவு செய்து இயக்க போக்குவரத்து துறை  ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்.  இது குறித்து   தமிழக போக்குவரத்து துறை ஆணையர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  “ இந்த உத்தரவு மூலம் குறிப்பிட்ட கார் வகைகளை மட்டுமே வாடகை கார்களாக பயன்படுத்த முடியும் என்ற விதி மாற்றப்படுகிறது. இதன்மூலம் மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் சொகுசு மற்றும் ஆடம்பரம் கார்கள் உட்பட  அனைத்து வகை கார்களையும் பொது போக்குவரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

சொகுசு கார்

“  தமிழகத்தில்   சுற்றுலாவை விரும்பும் பயணிகள் தங்களுக்கு பிடித்த சொகுசு மற்றும் ஆடம்பர கார்களில் வாடகை முறையில் பயணிக்க முடியவில்லை என்ற குறை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் அனைத்து வகை கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக அதாவது மஞ்சள் போர்டு பதிவு செய்து வாடகைக்கு பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web