இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்!! மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அரிய வாய்ப்பு!!

 
உரிமை திட்டம்

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ1000 வழங்கப்பட்டது. இதனை முதல்வர் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இதற்காக 1 கோடிக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். 57 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள்   இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக  அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, இ-சேவை மையங்கள் மூலம் அவர்கள் விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு   30 நாட்களுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுத்த   வாக்குறுதிபடி  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமான மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

மகளிர் உரிமை தொகை

இந்த திட்டத்துக்காக பெண்கள் விண்ணப்பிக்கும் முகாமை  ஜூலை மாதம் 24ம் தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இதன்படி   தமிழகம்  முழுவதும் 35925 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த பணியில், 68190 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தமாக 1 கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் அவர்களது விண்ணப்பம் பெறப்பட்டதாக கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு கள ஆய்வுகள் செய்யப்பட்டன.  அதில் ஒரு கோடியே 6 லட்சத்து 55000  விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. விண்ணப்பத்தவர்களில் 56.60 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. அவர்களில் பலர் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, அவர்களது சந்தேகத்தை போக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

உரிமை தொகை

நேற்று முதல் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்  மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இது கிடைத்ததும்   30 நாட்களுக்குள் ஆன்லைன்  மூலம்  மேல்முறையீடு செய்யலாம்.  தங்களது விண்ணப்பங்கள் குறித்த மேலான விவரங்களுக்கு  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தினை தொடர்புகொண்டு விண்ணப்பம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.  அதன்படி, மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.  நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அறிந்துகொள்ள முடியாதவர்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web