அசத்தல்... மூச்சுக்காற்றால் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யலாம்.. ஐஐடி மாணவர்கள் சாதனை... !

 
மூச்சுக்காற்று

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே மக்களின் பணிகளை எளிதாக்கி வருகிறது. பிடியில்லாத கத்தியை போல இதனால் பயன்களும், ஆபத்தும் இணைந்தே உள்ளது. இது குறித்த ஆராய்ச்சிகளும் தொடர்ந்து வருகிறது.  ஸ்மார்ட்போன்கள் பாதுகாப்புக்காக பலரும் நம்பர் லாக் அல்லது பேட்டர்ன் லாக் மூலம் லாக் செய்யப்படுவதுண்டு.  தற்போது  மூச்சுக்காற்று மூலம் ஸ்மார்ட் போனை அன்லாக் செய்யும் வழிமுறையை கண்டறிந்துள்ளனர்.  ஒவ்வொருவரும் வெளியேற்றும் மூச்சுக்காற்றின் அளவு மாறுபாடும். இது தனித்துவம் வாய்ந்ததால் இதன்  அடிப்படையில் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது

மூச்சுக்காற்று
ஏற்கனவே  கைரேகைகள் பயன்படுத்தப்படுவதைப் போலவே, தற்போது  மூச்சுக்காற்று பயோ மெட்ரிக் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதனை பயோமெட்ரிக் கையொப்பமாக  பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா தலைமையிலான சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.இந்த குழுவினர்  94 பேரிடமிருந்து சுவாச மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்து  97 சதவீத துல்லியத்துடன் சம்பந்தப்பட்ட நபரின் அடையாளத்தை சரியாக உறுதிப்படுத்துவதை கண்டறிந்துள்ளனர்.  இந்த தொழில்நுட்பத்தில் இன்னும் முன்னேற்றத்தை கண்டறிய தொடர்ந்து மாணவர்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே ஜப்பானில் உள்ள கியூஷு பல்கலைக்கழகத்தில்  ஆராய்ச்சியாளர்கள் ஒரு செயற்கை மூக்கு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஆராய்ச்சி செய்தனர்.

மூச்சுக்காற்று

இது அவர்களின் மூச்சு வாசனையின் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள்  மக்களை அடையாளம் காட்டுகிறது. இந்த அமைப்பு தனிநபர்களை அடையாளம் காண்பதில் 97.8 சதவீதம் துல்லியமாக செயல்படுகிறது. அதே நேரத்தில்   இந்த முறை சோதனைக்கு முன் மக்கள் 6 மணி நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.  இதனை மேலும் மேம்படுத்தும் ஆராய்ச்சிகள்  தொடர்ந்து வருகிறது. இந்த ஆராய்ச்சி சுவாசத்தை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை திறப்பதற்கு மட்டுமின்றி, பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும் கருதப்படுகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web