19 வயசு தான்... யூடியூப் முன்னாள் சிஇஓ மகன் மயங்கி சரிந்து மரணம்... தொடரும் சோகம்!

 
மார்கோ டிராப்பர்

சமீபகாலமாக இளம் வயது மரணங்கள் அதிகரித்து வருகின்றன. உடற்பயிற்சி செய்யும் போது மரணம், நடனம் ஆடும் போது மரணம், விளையாடும் போது மரணம், மணமேடையில் மயங்கி சரிந்து மரணம், பள்ளி மாணவன்  மரணம் என தொடர்கதையாகி வருகிறது. யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சூசன் உசுஜிக்கி. இவரது மகன் 19 வயதான மார்கோ டிராப்பர். இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்தவர். இவர்  மர்மமான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மார்கோ, பல்கலைக்கழக வளாகத்தில் மயங்கி விழுந்து கிடப்பதாக போலீஸாருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் தெரிவித்தது.  

மார்கோ டிராப்பர்

உடனடியாக  சம்பவ இடத்திற்கு வந்த பெர்க்லி மீட்பு படை மார்கோவிற்கு அவசரகால சிகிச்சை வழங்கியது.  சிகிச்சை பலனின்றி  பல்கலைக்கழக வளாகத்திலேயே  உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.  மரணத்திற்கான காரணம் குறித்து  தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
 தடை செய்யப்பட்ட போதைப்பொருளை அதிக அளவில் உட்கொண்டதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என மார்க்கோவின் பாட்டி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

மார்கோ டிராப்பர்

அவரது உடலில் இருந்து எடுக்கப்படும் உறுப்புகளை ஆய்வு செய்து, உயிரிழப்பிற்கான காரணம் அறிய  30 நாட்களுக்கு மேல் ஆகலாம்.   அதன் பிறகே அவரது மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என போலீஸார்  தெரிவித்துள்ளனர்.  சமூக வலைதளங்களில் மார்கோ டிராப்பர் மரணத்துக்கு இரங்கலும், சூசனுக்கு ஆறுதலும்   தெரிவித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web