அதிர்ச்சி வீடியோ... மெட்ரோ ரயிலில் இளம் ஜோடி சில்மிஷம்!!

 
மெட்ரோ

 சமீபகாலமாக தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில்களில்  சில அருவறுக்கத்தக்க சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது மற்ற ரயில் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. அதன்படி  இளம் ஜோடிகள் முத்தமிட்டு கொள்வது, கட்டியணைத்து கொள்வது போன்ற சில்மிஷங்களில் ஈடுபட்ட வைரல் வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.


 

மெட்ரோ ரயில் ஓடி கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் கட்டியணைத்து கொண்டு முத்தமிட்டு கொள்வதை இந்த வீடியோவில் பார்க்கலாம். டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில்  இந்த அநாகரீகம் அரங்கேறியுள்ளது. இந்த இளம் ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அதே நேரத்தில் முதியவர் ஒருவர் மெட்ரோ ரயிலில், புகை பிடிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

மெட்ரோ ரயில்

இத்தகைய சம்பவங்கள் சக பயணிகளிடையே பெரும் அச்சத்தையும்,  அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் சரியான முறையில்  விதிமுறையை பின்பற்ற வேண்டும் .  இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web