பெற்றோர்களே உஷார்! BTS மோகத்தால் சிக்கி தவிக்கும் 2k கிட்ஸ்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

 
bts

இன்றைய 2K குழந்தைகள் தலைமுறை இந்திய இசை கலாச்சாரத்தை ஒதுக்கி விட்டு BTS மோகத்தில் சிக்கி அடிமையகி விட்டனர். கொரிய இசைக்குழுவைச் சேர்ந்த ஆர்எம், ஜின், சுகா, ஜே ஹோப், ஜிமின், வி, ஜங் குக் ஆகிய ஏழு பேர் BTSன்  இசை குழுவின் சொந்தக்காரர்கள். கண்ணைக் கவரும் வண்ணமயமான உடைகள், விதவிதமான ஹேர் ஸ்டைல்கள்... என இளைஞர்களைக் கவர்ந்து, தங்கள் இசைக்கு அடிமையாக்குகிறார்கள்.

ஆரம்பத்தில் பொழுதுபோக்கிற்காக இதை பார்க்கும் கல்லூரி மாணவர்களும், இளம் ரசிகர்களும் இறுதியில் மனநல ஆலோசகரை சந்திக்கும் அளவுக்கு அதில் மூழ்கிவிடுவார்கள் என்று மனநல ஆலோசகர்கள் பெற்றோரை எச்சரிக்கின்றனர். சமீபகாலமாக, பிடிஎஸ் இசைக்கு அடிமையாகி திருமணம் செய்து கொண்டால் கொரிய நாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வேன் என்று தனது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ஒரு பெண்.

மனநல ஆலோசகரிடம் கலந்தாலோசித்த பிறகே அவருக்கு உண்மை நிலை புரிந்ததாக கூறப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் இந்த BTS பாடலுக்கு அடிமையாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் தனிமையே என்றும், அதிலிருந்து விடுபட இது போன்ற வீடியோக்களை செல்போனில் சாதாரணமாக பார்க்க ஆரம்பித்து, அதுவே பிற்காலத்தில் பெரிய பிரச்சனையாகி விடும் என்றும் எச்சரிக்கின்றனர்.

எனவே, உங்கள் மகனோ அல்லது மகளோ தொடர்ந்து 45 நிமிடங்களுக்கு மேல் செல்போனைப் பார்ப்பது அல்லது டிவியில் ஏதேனும் வீடியோவைப் பார்ப்பது என்றால், அவர்கள் என்ன பார்க்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும் BTS இசைக்கு அடிமையான சிறுமிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web