வைரல் வீடியோ... ஜவான் பாடலுக்கு இளம்பெண் நோயாளி நடனம்!!

நடிகர் ஷாருக் கான், நயன் தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் சில் நாட்களுக்கு முன் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது ஜவான் திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். தமிழ் இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளிவந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் அனிருத் இசையில் தாளம் போட வைக்கின்றன.
குறிப்பாக “ராமய்யா... வஸ்தாவையா..., சலேயா” பாடல்கள் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளன. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலங்களில் ஒருவரான பிரிஷா டேவிட் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அப்போது, சலேயா பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். ஷாருக் கானுக்கு சுகப்படுத்தும் ஆற்றல் உள்ளது என தலைப்பிட்டு பதிவை வெளியிட்டு உள்ளார்.
This is very good! Thank u… Get well soon and watch the film!!! Looking forward to another dance video but once you’re out of the hospital…. Love u!! https://t.co/LjzAwSSP6k
— Shah Rukh Khan (@iamsrk) September 14, 2023
அதில் அவர், குணமடைந்து மீண்டு வர ஷாருக் கானின் ஜவான் பட பாடல்கள் பெரிதும் உதவின எனவும் குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோவில் பிரிஷா, மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அணிய கூடிய கவுன் அணிந்து காணப்படுகிறார். சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ, ஷாருக் கான் கவனத்திற்கு சென்றுள்ளது. அவர் இந்த வீடியோவுக்கு எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு பதில் பதிவில், இது மிக நன்றாக உள்ளது. நன்றி. விரைவில் குணமடைந்து வரவும். வந்து படம் பார்க்கவும். நீங்கள் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து நடனம் ஆடும் மற்றொரு வீடியோவை காண காத்திருக்கிறேன் என பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...