அடுத்த அதிர்ச்சி.... திருச்சியில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி!!

 
கனகவல்லி

தமிழகத்தின் பல பகுதிகளில்  கடந்த சில நாட்களாக மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதில்  பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  

காய்ச்சல்


 திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் நரியன் தெருவில் வசித்து வருபவர்  ராஜ சுகுமார். இவரது மனைவி கனகவல்லி. 38 வயதான இவர்   மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.காய்ச்சல் தீவிரமான நிலையில்   நேற்று இரவு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்சியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.   ஏற்கனவே இன்று  திருவாரூரில் பயிற்சி பெண் மருத்துவர் மர்மக்காய்ச்சலால்  உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web