ஹாரன் அடித்தவரை விரட்டிச் சென்று தாக்கிய இளைஞர்கள்!!

 
அடிதடி ரகளை

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர்  விக்னேஷ் .இவர் தன்னுடைய  மனைவி மற்றும் மைத்துனருடன் காரில் ஈசிஆர் சாலையில் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய காருக்கு முன்னால் இளைஞர்கள் சிலர் பைக்கை வளைத்து வளைத்து ஓட்டி வந்தனர். வழக்கறிஞர் விக்னேஷ் 2 அல்லது 3   முறை ஹாரன் அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள், காரை நிறுத்தச் சொல்லி மிரட்டல் விடுத்தனர்.  விக்னேஷ் காரை நிறுத்தாமல்,  தூரத்தில் இருந்த பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தினார். 

விக்னேஷ்
அவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள், விக்னேஷ் மற்றும் அவரது உறவினருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த இளைஞர்கள் அவர்களுடைய நண்பர்களை வரவழைத்து இருவரையும் தாக்கத் தொடங்கினர்.இளைஞர்கள் காரில் வந்தவர்களை கடுமையாக தாக்கும் காட்சி பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

விக்னேஷ்

இச்சம்பவம் குறித்து நீலாங்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரங்களில் ஈசிஆர் சாலையில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்குவதும், மற்றவர்களுக்கு இடையூறு அளிப்பதும் வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web