இளம்பெண் அடித்துக்கொலை... கணவர் பரபரப்பு வாக்குமூலம்!

 
அடித்து கொலை
 


சென்னை திருவொற்றியூர் மேட்டு தெருவில் வசித்து வருபவர் 26 வயது  கோபால் . இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி ஜோதிகா . இந்த தம்பதிக்கு  ஒரு மகன் உள்ளார். நேற்றிரவு கோபால் போதையில் இருந்தபோது திடீரென அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.  திருவொற்றியூர் காவல் நிலையம் சென்று, ‘’எனது மனைவி ஜோதிகா திடீரென இறந்துவிட்டார்’ என அழுதுகொண்டே கூறியுள்ளார்.  உடனடியாக போலீசார் சென்று பார்த்தபோது ஜோதிகா தலையில் காயத்துடன் சடலமாக கிடந்தார்.  

ஆம்புலன்ஸ்

இது குறித்து போலீசார்  கோபாலிடம் தீவிர விசாரணை நடத்தியதில்  அவர், ‘’ஜோதிகா வேறொரு நபருடன் பழகிவந்ததால் அவரை கண்டித்து சண்டை போட்டேன். இதன்பின்னர் மது போதையில் தூங்கிவிட்டேன். சிறிது நேரம் கழித்து எழுந்தபோது துப்பட்டாவை ஜன்னலில் கட்டி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கிடந்தார்’ எனக் கூறியுள்ளார். 

போலீஸ்

 ஜோதிகாவின் நெற்றியில் மட்டும் காயம் உள்ளதால் அவரது கணவன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஜோதிகாவின் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  ‘’பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் ஜோதிகாவின் சாவுக்கான காரணம் தெரியவரும்’’ என  காவல்நிலைய ஆய்வாளர் ரஜினிஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?