எறும்பு மருந்து சாப்பிட்டு இளம் பெண் தற்கொலை... பகீர் பிண்ணனி!!

 
சௌந்தர்யா

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளத்திற்கு  அருகே அமைந்துள்ளது  வெட்டுக்காடு கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும்   ஏழுமலையின் மகள் சௌந்தர்யா . இவருக்கு வயது 22.   இவருக்கும் மங்காவரம் கிராமத்தில் வசித்து வரும் கட்டிட தொழிலாளி கணேசுக்கும்  திருமணம் ஆகி இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. இவர்களுக்கு  குழந்தைகள் ஏதும் கிடையாது.  குழந்தை இல்லாத ஏக்கத்தில்  சௌந்தர்யா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.  

விஷம்

அதனை உறவினர்களிடம் தெரிவித்து மனசங்கடப்பட்டார். மேலும் குழந்தை இல்லாத ஏக்கத்தால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.  இந்நிலையில், ஆகஸ்ட்   14ம் வீட்டில் தனியே இருக்கும்போது எறும்பு மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டார்.  இதனை அறிந்த உறவினர்கள் பதறியடித்து  அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர்.

போலீஸ்

அங்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் சௌந்தர்யா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம் பெண் சௌந்தர்யா எறும்பு மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை