இளம்பெண் படுகாயம்... கார் ஓட்டி பழகியவரால் விபரீதம்!
தூத்துக்குடி சிதம்பரம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜு இவர் தனது நண்பர் ஒருவருடன் இன்று காலை சிதம்பர நகர் மேற்கு பகுதி சாலையில் கார் ஓட்ட பழகிக் கொண்டு இருந்தாக கூறப்படுகிறது. அப்போது திடீரென சாலையின் நடுவே இருந்த பள்ளத்தில் காரை விடாமல் இருப்பதற்காக திருப்பி உள்ளனர்.
இதில் கார் நிலைத்திடுமாறி சாலையின் மற்றொரு புறத்திற்கு கட்டுப்பாட்டை இழந்து சென்றுள்ளது. இதில் பிரையன்ட்நகரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஜெயா என்ற பெண் மீது கார் மோதி அவரை கீழே தள்ளியதுடன் அந்த பகுதியில் இருந்த ஒரு ஆட்டோ நிறுவனத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. இதில் படுகாயம் அடைந்த ஜெயா தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெற்ற பகுதி அருகே பள்ளி இருக்கும் நிலையில் அந்த நேரத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!