காதலி பேச மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை. .. கதறி துடித்த பெற்றோர்!!

 
சரத்குமார்

இன்றைய இளைஞர்கள் எதையும் எதிர்த்து போராடி வாழ்வில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்து வருகின்றனர். வீட்டில் பெற்றோர்கள், உறவினர்கள், பள்ளியில் ஆசிரியர்கள், சக மாணவிகள் நண்பர்கள் திட்டினாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விபரீத முடிவுகளை நோக்கி சென்று விடுகின்றனர்.  சென்னையை அடுத்த புழல் புத்தகரம் விக்னேஸ்வரா நகரில் வசித்து வருபவர்   சரத்குமார்.  

மாணவர் தற்கொலை

சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்  பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சரத்குமார், சாப்பிட்டுவிட்டு படுக்கை அறைக்குள் தூங்க சென்றார்.இந்நிலையில், நேற்று காலை சரத்குமார், புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை அறிந்த  அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

ஆம்புலன்ஸ்

இது குறித்து  தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்   சரத்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து  போலீஸார் வழக்குப்பதிவு செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டதில்  . காதலி பேச மறுத்ததால் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காதலி பேசாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!