இளைஞர் 24 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை... கதறித் துடிக்கும் பெற்றோர்!!

 
சந்தோஷ்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்  சிறுமுகை ஜீவா நகரில் வசித்து வருபவர்   பஞ்சலிங்கம் .  இவரது மகன் ராகுல் ராம். 27 வயதாகும் ராகுல்   5 ஆண்டுகளுக்கு முன்பு எம்எஸ் மற்றும் பிஎச்டி படிப்புக்காக  தைவான் நாட்டில் உள்ள தைபே பகுதிக்கு சென்றார். படிப்பை முடித்துவிட்டு  தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், ராகுல் ராம் தான் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 24வது மாடியில் இருந்து குதித்து நவம்பர் 14 தற்கொலை செய்து கொண்டார்.

சந்தோஷ்

இதனை  நேற்று முன்தினம் தைவான் நாட்டு போலீசார் பஞ்சலிங்கம், செல்வி தம்பதிக்கு தெரிவித்துள்ளனர். இதனால் ராகுல் ராமின் பெற்றோர்கள், சகோதரி, உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துனர்.  மகனை கண்ணால் பார்க்க முடியாத  சோகத்தில் தவிக்கும் ராகுலின் பெற்றோர்  “ராகுல் ராமுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமில்லை.  தீபாவளிக்கு   கூட வீட்டில் எங்களிடம் நல்லபடியாக பேசிக் கொண்டிருந்தார்.  அப்போது, பெற்றோரிடம் சந்தோஷமாக பேசி உள்ளார்.

போலீஸ்

அவர் தான் பணிபுரிந்து வரும் இடத்திலிருந்து விலகி வேறொரு இடத்திற்கு வேலைக்கு சேர உள்ள தகவலையும் கூறினார். “    தற்போது திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டு  உயிரிழந்த தகவல் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவரது உடலை விரைந்து மீட்டு இந்தியா கொண்டு வர தமிழக  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  இதற்கிடையே, ராகுல் ராம் உடலை இந்தியா கொண்டு வருவதற்காக தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மத்திய   வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நீலகிரி எம்பி ஆ.ராசா கடிதம் எழுதி உள்ளார்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web