பகீர் வீடியோ... கஞ்சா கும்பலால் பறிபோன இளைஞர் உயிர்!!

 
பாலச்சந்தர்

சென்னை கொரட்டூர் பகுதியில் வசித்து வருபவர் பாலசந்தர். இவர் இன்ஜினீயரிங் படித்து விட்டு  அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பாலசந்தர் தன்னுடைய நண்பர்களுடன் ஆகஸ்ட் 20ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு   மது அருந்திவிட்டு மண்ணூர்பேட்டை பகுதியில் உள்ள ஃபாஸ்ட் புட் கடைக்குச் சென்று ப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்தார். பின்னர் கடையின் வெளியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.



அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த சிலருக்கும் பாலசந்தருக்கும் இடையே பைக்கை நிறுத்துவது  குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.   இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா போதை கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலசந்தரை சரமாமரியாக வெட்டியது.   அதை அவரின் நண்பர்கள் தடுத்த போதிலும் பாலசந்தரை டார்கெட் செய்து கஞ்சா போதை கும்பல் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.


 
நண்பர்கள் கண்முன்னாலேயே பாலசந்தர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். பாலசந்தரை மீட்ட அவரின் நண்பர்கள் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பாலசந்தர் ஏற்கனவே  உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.இதையடுத்து இந்தக் கொலை சம்பவம் குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாலசந்தரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாலச்சந்தர்


பின்னர் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் பாலசந்தரின் நண்பர்களிடமும் விசாரித்தனர். அதன் அடிப்படையில் விசாரித்தபோது இந்தக் கொலையில் ஈடுபட்டது அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஒரு ரௌடி கும்பல் எனத் தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது பைக்கை நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்தது தெரியவந்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை