போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம சாவு...!!

 
மதுபோதை

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை  இடங்கணசாலை மோட்டூர் பகுதியில் வசித்து வருபவர்   பூபதி . 32 வயதாகும் இவர்   ஊர்க் காவல் படையில் பணிபுரிந்து  வருகிறார். மேலும் அதேபகுதியில் மறுவாழ்வு மையத்தையும் நடத்தி வருகிறார்.  8 மாதங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த மறுவாழ்வு மையத்தில்  மதுபோதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இளம்பிள்ளை அடுத்த நடுவனேரி பகுதியில் வசித்து வரும்  கந்தசாமி மகன் சந்திரசேகர். 29 வயது பட்டதாரியான சந்திரசேகர் மதுவுக்கு அடிமையானார். இதனால் அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக பூபதி நடத்தி வரும் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.  

மதுபோதை

இந்த மறுவாழ்வு மையத்தில்  நேற்றிரவு திடீரென அவர் அளவுக்கு அதிகமாக கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் அவரை மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள்   அவரை கயிற்றால் கட்ட முயற்சித்துள்ளனர்.  அப்போது அவருக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.   உடனடியாக  அவரை அங்கிருந்த ஊழியர்கள் இளம்பிள்ளை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து  விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில்  உடனடியாக விரைந்து வந்த போலீசார்  அவரது உடலைக் கைப்பற்றி  சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  

ஆம்புலன்ஸ்

இந்த மறுவாழ்வு மையம் தொடங்கி 8 மாதங்கள் ஆகும் நிலையில் இங்கு தற்போது  மொத்தம் 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  மேலும் அவர் எவ்வாறு உயிரிழந்தார், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா   அல்லது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாரா, வேறு எதுவும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web