சிறுவனை மிரட்டி பாலியல் கொடுமை.. இளைஞருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்..!

 
கம்பம் விஜய்

2019 ஆம் ஆண்டு கம்பம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனை கொலை மிரட்டல் விடுத்து, அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். பின்னர் சிறுவனை அடித்து துன்புறுத்தியுள்ளார். இளைஞரிடமிருந்து தப்பிய சிறுவன், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் கம்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பேருந்தில் கஞ்சா கடத்த முயன்ற மூவர் கைது – News18 தமிழ்

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.இந்த வழக்கு தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று விசாரணை முடிவடைந்த நிலையில், சாட்சியங்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் விஜய் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

21 year jail term for youth who molested 15 year old boy Theni

பின்னர், குற்றம் சாட்டப்பட்ட விஜய்க்கு போக்சோ சட்டத்தின் 4(2) பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.20000 ரூபாய் அபராதமும், அபராத தொகையைக் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு மெய்க்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.மேலும் சிறுவனை அடித்து துன்புறுத்தியதற்காக, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 323ன் கீழ், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web