காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சியடைந்த போலீஸ்!

 
ஆதித்யா

சேலம் எடப்பாடி காவல் நிலையம் மீது நேற்று காலை 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தீவிர விசாரணை நடத்தினார். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, குற்றவாளியை  பிடிக்க 3 உதவி ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சுமார் 10 மணி நேரத்தில் தீவிர விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டை வீசிய நபரை அதிரடியாக கைது செய்தனர். அதாவது எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குடும்பத்தை சேர்ந்த ஆதி என்ற ஆதித்யா (20) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பல தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக யூடியூப், ஃபேஸ்புக் பார்த்து மூளைச்சலவை செய்யும் இளைஞர்கள் ரவுடித்தனம் செய்தால்தான் பிரபலம் ஆக முடியும் என்று நினைக்கிறார்கள். எங்கள் பெயரை பிரபலப்படுத்துவதற்காக பெட்ரோல் குண்டை வீசியதாக அவர் கூறியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன், ""இரண்டு பீர் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி, அதில் பேப்பரை மாட்டி காவல்நிலையத்தில் தீ வைக்க முயற்சித்துள்ளார். ஆனால், பொருட்கள் எதுவும் சேதமடையவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பயன்படுத்தி யாருக்கும் காயம் ஏற்படவில்லை என 3 போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

சம்பவம் நடந்த 10 மணி நேரத்தில் பெட்ரோல் குண்டை வீசிய ஆதித்யா என்ற இளைஞரை கைது செய்துள்ளோம்.  யூடியூப், ஃபேஸ்புக்கில் ரவுடித்தனம் செய்யும் இவர்களெல்லாம் பிரபலமடைந்து வருகின்றனர். எனவே, தான் பிரபலமாக வேண்டும் என்று நினைத்து, தனது பெயரைப் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தச் செயலைச் செய்துள்ளார் என்று கூறியுள்ளனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி