யூ-டியூப் சேனல் உருவாக்கம் சந்தைப்படுத்தல்... தமிழக அரசின் சிறப்பு பயிற்சி வகுப்புக்கள், விண்ணப்பிக்கும் முறை.. முழு தகவல்கள்!

 
யூடியூப்
 


கொரோனா காலகட்டத்திற்கு பிறகு கையில் மொபைல் வைத்திருப்பவர் அத்தனை பேரும் யூடியூபர்கள் தான். தமிழகத்தை பொறுத்தவரை தொழில் துறையை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பினை உருவாக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொழில்முனைவோர்களுக்கு புதிய யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.   இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

20 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்களை அரசு முடக்கியது


இதற்கான அறிவிப்பை தமிழக செய்தி தொடர்பு கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில்   ஜூலை 22ம் தேதி முதல் ஜூலை 24ம் தேதி வரையில் 3  நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. 3 நாட்களும் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் இந்த பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இந்த 3 நாட்கள் பயிற்சியில் தொழில்முனைவோர் எவ்வாறு யூடியூப் சேனலை உருவாக்குவது, அவர்கள் பொருட்களை/வணிகத்தை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்த நேரடி  பயிற்சி வகுப்பு அளிக்கப்படும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

யூடியூப்

குறைந்தபட்சமாக 10 வகுப்பு படித்தாலே போதுமானது.  மேலும் கூடுதல் தகவல்களை அறியவும்,  பயிற்சிக்கு விண்ணப்பிக்கவும் விரும்புபவர்கள்  www.editn.in என்ற இணையதள பக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் . அலுவலக வேலை நாட்களில் நேரில் வந்தும் தெரிந்து கொள்ளலாம். இந்த பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் இங்கேயே  தங்கி பயிற்சி பெறவும்  குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள்  அதற்கும் விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன முகவரி :

சிட்கோ தொழிற்பேட்டை,
இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை,
ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை -600 032.
044-22252081/22252082/8668100181/9841336033.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!