சவுக்கு சங்கர் வழக்கு... யூ-டியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீனில் விடுதலை!
சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யூ-டியூப் சேனல் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு, திருச்சி மத்தியச் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பெண் காவலர்கள் குறித்த அவதூறாக பேசிய சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய புகாரில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கடந்த மே மாதம் 10ம் தேதி இரவு திருச்சி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், ஜெரால்டை திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவை போலீசாரும் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் கடந்த மே 22ம் தேதி ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், கோவை நீதிமன்றத்தில் இவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மீண்டும் அப்பீல் செய்திருந்தார் ஃபெலிக்ஸ்.

அப்பீல் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவை டவுன்ஹால் காவல் நிலையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கியது.கோவை, திருச்சி ஆகிய வழக்குகளில் ஜாமீன் கிடைத்ததை அடுத்து ஃபெலிக்ஸ் ஜெரால்டு இன்று காலையில் ஜாமீனில் விடுதலையானார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
