யூடியூபர் இர்பான் மனைவிக்கு ஜோராக நடந்த வளைகாப்பு.. இணையத்தில் போட்டோஸ் வைரல்!

சமீப காலமாக, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களை விட யூடியூப் பிரபலங்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் ஹோட்டல்களில் விற்கப்படும் விதவிதமான உணவுகளை யூடியூப் தளத்தில் விமர்சித்து மிகவும் பிரபலமானவர் இர்பான். யூடியூப்பில் அவருக்கு 40 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர் உள்ளனர். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.
யூடியூப் மூலம் மாதந்தோறும் பல லட்சம் சம்பாதிக்கும் இர்பான், கடந்த ஆண்டு மே மாதம் ஆசிஃபாவை திருமணம் செய்து கொண்டார். அவரது பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர், அது மிகவும் பிரமாண்டமாக இருந்தது. யூடியூப் பிரபலங்கள் மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமலி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது சமையல் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் இர்ஃபான். சில மாதங்களுக்கு முன் மனைவியுடன் துபாய் சென்ற போது... கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருந்த குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து கண்டுபிடித்தனர்.
இது குறித்து இர்பான் வீடியோ வெளியிட்ட நிலையில், சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இர்பான் மீது மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறிய நிலையில், இதற்கான நோட்டீஸ் அவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பின்னர், இர்ஃபான் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதோடு, மட்டுமல்லாமல், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
தற்போது, இர்பானின் மனைவி ஆசிஃபா நிறை மாத கர்ப்பிணியாக உள்ளதால், இர்ஃபான் தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்தினார். இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இர்பானின் மனைவி கழுத்தில் கிலோ கணக்கில் தங்க நகைகளுடன் ஜொலிக்கிறார், அதை நீங்களே பாருங்கள்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா