என் சாதனையை முறியடித்து விட்டீர்கள் மேடம்... தேசிய விருது வென்ற 4 வயது த்ரிஷாவுக்கு கமல் வாழ்த்து!

 
த்ரிஷா தோஷர்


செப்டம்பர் 23 ம் தேதி தலைநகர் டெல்லியில் 71 ம் தேசிய விருது விழா நடைபெற்றது. 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமது கையால் விருதுகளை வழங்கினார்.  சிறந்த நடிகருக்கான விருதை ஜவான் படத்திற்காக ஷாருக் கான் பெற்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வாத்தி படத்திற்காக ஜிவி பிரகாஷ் பெற்றார். ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் திரைப்படம் அதிகபட்சமாக மூன்று விருதுகளை வென்றது. இதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை வென்றவர்  4 வயது  த்ரிஷா தோஷர்.


இவர் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பரவலான அங்கீகாரத்தை பெற்றார்.  குழந்தை நட்சத்திரமான த்ரிஷா தோஷர். நாள் 2  என்கிற படத்திற்காக இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. 4 வயதில் தேசிய விருது வென்று உலகநாயகன் கமல்ஹாசனின் சாதனையை முறியடித்துள்ளார். 'பெட் புராண்' , 'மன்வர் மர்டர்ஸ்' இவர் நடித்த படங்கள்.  

த்ரிஷா தோஷர்
தனது சாதனையை முறியடித்த த்ரிஷா தோசருக்கு உலக நாயகன் கமல்ஹாசன் வீடியோ கால் மூலம் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில்  அன்புள்ள திருமதி ட்ரீஷா தோஷர், உங்களுக்கு எனது மிகப்பெரிய பாராட்டுக்கள். எனது முதல் விருதைப் பெற்றபோது எனக்கு  ஆறு வயது என்பதால், நீங்கள் எனது சாதனையை முறியடித்துவிட்டீர்கள்! வாழ்த்துக்கள் மேடம். உங்கள் அற்புதமான திறமையை மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு எனது நன்றிகள்." என கமல் பதிவிட்டுள்ளார்

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?