ஆரம்பிச்சிட்டாங்கய்யா... பிக்பாஸ் வீட்டில் முதல் சண்டை.. புரோமோ வீடியோ!!

 
பிக்பாஸ்7

பிக் பாஸ்  சீசன் 7  அக்டோபர் 1 ம் தேதி பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கியுள்ளது. சீசன் தொடங்கிய 3 வது நாளிலேயே  அதிரடியாக சில சண்டைகள், வாக்குவாதங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இது குறித்த  புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. சீசன் 7ல் 2 வீடுகள்.  தற்போது பிக் பாஸ் கொடுத்து வரும் அடுத்தடுத்த டாஸ்க்கும் போட்டியாளர்கள் மத்தியில் சண்டையை  ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.  பிக் பாஸின் முதல் கேம்   ’Know Your House Mate’ எனும் பெயரில் இந்த டாஸ்க் நடக்கிறது. இதில் போட்டியாளர்கள் தலா ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் குறித்த 6 தகவல்கள் போர்டில் எழுதப்பட்டிருக்கும். அதில் சரியானவற்றைக் கண்டுபிடித்து அதைப் பற்றி போட்டியாளர்கள் கூற வேண்டும். இன்று வெளியான முதல் புரோமோவில் ’Know Your House Mate’ விளையாட்டு தொடர்ந்து விளையாடப்படுகிறது. அதில் மாயா கிருஷ்ணன்  கமல்ஹாசன் சாருடன் நடித்திருக்கிறேன் எனக் கூறுகிறார்.   கையில் 495K என எழுதப்பட்டுள்ள சிலேட் ஒன்றையும் வைத்துள்ளார்.  

பிக்பாஸ்7

விஷ்ணு சில கேள்விகளை முன்வைக்கிறார்.  அவருக்கு மாயாவுக்கும் போட்டி என்பதை குறிக்கும் வகையில் மாயா Vs விஷ்ணு என விளையாட்டு ஆரம்பமாகிறது. அப்போது பிரதீப் குறித்த பேச்சு வர, மாயா, அவன் என்ன என் மாமனா மச்சானா என ஆவேசமடைகிறார்.  கடைசியாக விசித்ரா, விஷ்ணுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  நிறைய பேரின் பர்சனல் விசயங்களை விஷ்ணு பேசியதாக அவர் கூறுகிறார். இந்த புரோமோவிற்கு  ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டில் முதல் சண்டை ஆரம்பித்து விட்டது எனக் கூறி  வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web