ஆந்திராவில் பயங்கரம்: நடுரோட்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை!
நாடு முழுவதுமே சமீபமாக வன்முறை செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆந்திராவில், நேற்றிரவு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி நிர்வாகி நடுரோட்டில் படுகொலைச் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி நிர்வாகியாக பதவி வகித்து வந்தவர் ஷேக் ரஷீத்.
இவர் நேற்றிரவு பல்நாடு மாவட்டத்தில் உள்ள வினுகொண்டா நகரில் நடுரோட்டில் ஷேக் ஜிலானி என்பவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அங்கிருந்தவர்கள் இந்த படுகொலை சம்பவத்தை செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.ஷேக் ரஷீத்தின் கழுத்தில் வெட்டுவதற்கு முன்பாக, அவரது இரண்டு கைகளையும் துண்டித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் சாலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த கொலைக்கு பின்னால் தனிப்பட்ட பகைமை காரணமாக இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பல்நாடு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
