தேர்தல் பிரச்சாரத்தில் வடிவேலு... மகனை ஸ்கூலுக்கு அனுப்பற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு கலைஞரு... நடிகர் வடிவேலுவின் கலகல பேச்சு!

 
வடிவேலு

வடிவேலு ரிட்டர்ன்ஸ்... என மக்கள் குஷியில் இருக்கின்றனர். வோட்டு போடுகிறார்களோ இல்லையோ... வடிவேலுவின் பிரச்சார மேடை அதிர்கிறது. வடிவேலுவின் நேற்றைய திமுக மேடை பேச்சு தான் இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  “தன் மகனை ஸ்கூலுக்கு அனுப்புற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு கலைஞர்” என சென்னை பெரம்பூரில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் நடிகர் வடிவேலு பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

சென்னை பெரம்பூரில் நடைப்பெற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு பேசியது வைரலாகி வருகிறது.

"ஸ்டாலின் அய்யா முதலில் திமுகவின் தொண்டன். தொண்டன் தான் இப்போது முதல்வர் ஆகியுள்ளார். திருமணமான பத்து நாட்களிலேயே சிறை சென்றுள்ளார். கலைஞர் அய்யாவும் தனது மகனை ஸ்கூலுக்கு அனுப்புவது போல சிறைக்கு அனுப்பியுள்ளார். ஸ்டாலின் எனப் பெயர் வைத்ததாலேயே அவருக்கு பள்ளியில் இடம் கிடைக்காமல் போனதாம். அதற்கெல்லாம் அசராத கலைஞர் ஸ்டாலின் என்ற பெயரை மாற்றாமல் பள்ளியை மாற்றியுள்ளார்” எனப் பேசினார்.

மேலும், “’புலிகேசி படத்தில் ராஜா குதிரையில் போவதால் பிரச்சினை வந்து, படத்தின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது. கலைஞரிடம் சொன்னேன். அவர் ஆ. ராசாவிடம் பேசி இதை சரிசெய்து ஒருவாரத்தில் படத்தை ரிலீஸ் செய்து கொடுத்தார். நான் எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகன். ஆனால், கலைஞரின் தீவிர பக்தன், விசுவாசி” என்றார்.

வடிவேலு

முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று அங்கு சுற்றிப் பார்த்தார். அங்கு ஏஐ தொழில்நுட்பம் மூலம் கலைஞரிடம் உரையாடி மகிழ்ந்தார். இது சமாதி இல்லை சன்னதி என்றும், திமுகவினருக்கு இதுதான் குலதெய்வ கோயில் என்றும் நெகிழ்ந்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web