மகளிர் விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வர உறுதியேற்போம்... டிடிவி தினகரன் மகளிர் தின வாழ்த்து!

 
சசிகலாவுக்கு அனுமதியில்லை! மகள் திருமணத்தை தள்ளி வைத்தார் டிடிவி தினகரன்!


 
“மகளிர் விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வர உறுதியேற்போம்” என்று ... அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து, தன்னுடைய ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண் சிசுக் கொலையை தடுத்திட தொட்டில் குழந்தை திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம்,


 


பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட மகளிர் சுய உதவிக்குழுக்கள்,  பெண்கள் பாதுகாப்பிற்காக மகளிர் காவல்நிலையங்கள் என மகளிர் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய இதயதெய்வம் அம்மா அவர்களைஇந்நாளில் நினைவுகூற கடமைப் பட்டுள்ளேன்.
பெண்கள் பெற்ற உரிமைகளை பேணிக்காக்கவும், பெற வேண்டிய உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய இன்றைய சமுதாயத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் வன்கொடுமைகளும் தொடர்கதையாகி வருவது வேதனையளிக்கிறது.

உலக மகளிர் தினம்

 

 

 தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் ஆகியோர் வகுத்துக் கொடுத்த சமதர்ம கொள்கையின் படி பெண்களின்முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சி என்பதை உணர்ந்து, பாலின சமத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்க்கையில் மகளிர் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம். என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web