கன்னியாகுமரி தொகுதியில் பெண் வேட்பாளர்களை களமிறக்கும் பாஜக... ரேஸில் முந்தும் முக்கிய புள்ளிகள்!

 
பாஜக பெண் வேட்பாளர்கள்

விரைவில் வரவிருக்கும் நடாளுமன்ற தேர்தலில் புது விதமாக பெண்களை களமிறக்குவதில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரியில் பெண் வேட்பாளர்களின் உணர்வு எப்போதும் பெரிய அளவில் வேலை செய்துள்ளதாக பாஜக கருதுகிறது. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு அளிக்க தமிழக பாஜக தலைமை யோசித்து வருகிறது. இந்த முயற்சியால் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற முடியும் என நம்புகின்றனர்.. தேர்வு பட்டியலில் 3 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

பட்டியலில் முதல் வேட்பாளர் பெயர் மீனாதேவ். இவர் ஏற்கனவே நாகர்கோவில் நகராட்சி தலைவராக இருந்தார். தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். அண்ணாமலைக்கும் அவரை நன்கு தெரியும். மாவட்ட மக்களுக்கு ஓரளவு பரிச்சயமான முகம். ஆனால் அவருக்கு சீட் கொடுப்பதில் என்ன பிரச்சனை என்றால், கடந்த தேர்தலில் சட்டசபை தேர்தல், தலைவர் தேர்தல், கடைசியில் நாகர்கோவில் மாநகராட்சி பா.ஜ.க மேயர் வேட்பாளராக பல வாய்ப்புகள் வழங்கப்பட்டு அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்தார். பட்டியலில் அடுத்த வேட்பாளரின் பெயர் திவ்யா சிவராம். இவர் நாகர்கோவில் மாநகராட்சி மண்டல செயலாளராக உள்ளார்.

மேலும், இவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனின் மருமகளும் ஆவார். நாகர்கோவில் மாநகராட்சித் தேர்தலில் நாஞ்சில் முருகனின் மகள் ஸ்ரீவித்யாவும், பாஜக சார்பில் திவ்யா சிவராமும் தனித்துப் போட்டியிட்டனர். இது அப்போதைய மேயர் தேர்தலில் பெரும் பேசுபொருளாக இருந்தது. இதனால், அவர் பிரபலமான வேட்பாளராகக் கருதப்படுகிறார். அவர் ஒரு புதிய முகம் மற்றும் பணம் நிறைந்தவர்.

கேவலம்.. பெண்களை இழிவு செய்தவரின் செயலை நியாயப்படுத்தலாமா? - அமைச்சரை  விளாசிய பாஜக மகளிர் அணி! | TN BJP Woman wing verbally attacks Minister mano  thangaraj - Tamil Oneindia

பட்டியலில் 3வது இடத்தில் உள்ளவரின் பெயர் உமாரதி ராஜன். பாஜக தமிழ்நாடு மாநில மகளிர் அணி செயலாளர். மாநிலம் முழுவதும் பயணம் செய்து பலருக்கும் தெரிந்தவர். ஆனால் அவருக்கு சீட் கொடுப்பதில் என்ன பிரச்சனை என்றால் அவர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு சீட் கொடுத்தால் மற்ற சமூகத்தினர் யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அதனால் அவருக்கு சீட் வழங்க வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக தலைமை யாருக்கு சீட் கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள

From around the web