இன்று வேட்புமனு பரிசீலனை... தமிழகத்தில் 1403 பேர் வேட்புமனு தாக்கல்... மார்ச் 30ம் தேதி இறுதிப்பட்டியல் வெளியீடு!

 
கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

ஏப்ரல் 19ம் தேதி முதல்கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளில் நடைப்பெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கடைசி நாளான நேற்று மாலை வரை 1403 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று, தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். 

தென்சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழிசை செளந்தரராஜன், ஜெயவர்த்தனன் என்று ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதே போன்று விருதுநகரில் ராதிகா சரத்குமார், விஜயபிரபாகரன் என ஸ்டார் வேட்பாளர் தொகுதியாக்கி இருக்கிறார்கள்.

தமிழிசை தமிழச்சி

சவப்பெட்டியுடன் சென்று வேட்புமனு, சட்டையில்லாமல் சென்று வேட்பு மனு, கழுத்தில் தாலியுன் சென்று வேட்புமனு தாக்கல், டெபாசிட் பணத்தை முழுக்கவே 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு சென்றது, நடனமாடியபடியே சென்றது என்று தேர்தல் திருவிழா துவக்கத்திலேயே களைக்கட்ட துவங்கியிருந்தது. டி.ஆர்.பாலு, உறுதிமொழியைப் படிக்க தடுமாறினார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர், தமிழ் படிக்கத் தெரியாமல் தடுமாறினார். இப்படியான சம்பவங்களும் வைரலானது. தேனியில் டிடிவியை எதிர்த்து போட்டியிடும் தங்க தமிழ்செல்வன் வேட்பு மனுவை மறந்து விட்டு வந்திருந்தார். 

சட்டப்பேரவை   இடைத்  தேர்தல்

நேற்று கடைசி நாள் என்பதால், நேற்று மட்டுமே 652 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரையில் 39 தொகுதிகளுக்கும் சேர்த்து 1403 பேர் வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  இன்று இந்த மனுக்களின் மீதான பரிசீலனை நடைப்பெற உள்ள நிலையில், வேட்பாளர்கள், தாங்கள் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுக்களை இம்மாதம் 30ம் தேதிக்குள் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 30ம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web