உலகமே அதிர்ந்தது! பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டி! குடுகுடுவென மைதானத்தில் நுழைந்து இளம்பெண் செய்த காரியம்!

 
பிரெஞ்சு ஓபன்

கடந்த 2ம் தேதி நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதி போட்டியை கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களையும், காண வந்த அனைத்து பார்வையாளர்களையும், ஊடகங்களின் கவனத்தையும் தன் பக்கர் ஈர்த்த 22 வயதேயான இளம் பெண் போராட்டக்காரர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

கடந்த 2ம் தேதி காஸ்பர் ரூட் மற்றும் மரின் சிலிச் இடையிலான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் அரை இறுதிப்போட்டி சுவாரசியமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது 22 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலரான இளம் பெண் ஒருவர் திடீரென்று ஆட்டக்களத்திற்குள் குதித்து உள்ளே வந்தார்.

பிரெஞ்சு ஓபன்

இதைப்பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் திடீரென்று அவர் டென்னிஸ் கோர்ட்டுக்கு நடுவே சென்று, விளையாட கட்டப்பட்டிருந்த நெட்டில், தனது கைகளை சங்கிலியால் கட்டிக் கொண்டு, தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நோக்கத்தில் அவர் அணிந்திருந்த வெள்ளை நிற சட்டையில், ‘‘எங்களுக்கு இன்னும் 1028 நாட்களே’ உள்ளன என்ற எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன.

இறுதியில் அந்த நபர் வலையில் இருந்து அகற்றப்பட்டு பாதுகாப்பு மூலம் நீதிமன்றத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டார். மைதானத்திற்குத் திரும்பிய வீரர்கள் சுமார் 10 நிமிட தாமதத்திற்குப் பிறகு ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இந்த திடீர் போராட்டத்திற்கு பிரெஞ்சு அமைப்பான டினையர் ரெனவேஷன் பொறுப்பேற்றுள்ளது. போராட்டத்தில் குதித்த பெண்ணை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்து சென்று அரங்கத்தில் இருந்து வெளியே அனுப்பினர்.

பிரெஞ்சு ஓபன்

இந்த போராட்டம் குறித்து குழு ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘22 வயதான அலிசி என்ற பெண் போராட்டக்காரர் ‘‘காலநிலை அவசரநிலை குறித்து மக்களின் கவனத்தை ஈப்பதற்காக விளையாட்டு அரங்கத்திற்கள் திடீரென நுழைந்தார்’’ என்று கூறியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web