நடிகர் விஷாலுக்கு பதிலடி கொடுத்த சென்னை மேயர்!

 
மேயர்

சென்னை பகுதியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் வீட்டை விட்டு வெளியே வந்து மக்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும். அண்ணாநகர் போன்ற பகுதிகளிலேயே வெள்ளம் சூழ்ந்துள்ளது. பிற பகுதிகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது என்று சென்னை மாநகரின் மேயர் ப்ரியாவை டேக் செய்து, ட்விட்டரில் நடிகர் விஷால் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், வெள்ள பாதிப்பு உங்களுக்கு மட்டுமில்லை, இதை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்று நடிகர் விஷாலுக்கு சென்னை மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார். 

முன்னதாக நடிகர் விஷாலின் வீடியோவில், அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் வெள்ளம் புகுந்துள்ளதாகவும், தனது வயதான பெற்றோர் இதனால் பயந்துள்ளதாகவும் தெரிவித்தார். இது மட்டுமில்லாமல் 2015-ல் இது போன்ற வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இப்போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அதே போன்ற மோசமான நிலை தொடர்வது வருத்தம் அளிக்கிறது எனவும், வரி கட்டும் குடிமகனாக தான் கேள்வி எழுப்புகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், இது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் பேசியிருந்தார்.

விஷால்

இந்த வீடியோவை வெளியிட்டு, சென்னை மாநகராடசி மேயர் பிரியா, சென்னை காவல் துறை உள்ளிட்ட பலரையும் நடிகர் விஷால் டேக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மேயர் ப்ரியா, "2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அப்படியான நிலையா இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது? 2015ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விடுமுறை எதுவும் அறிவிக்கவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியைகூட முன்னறிவிப்பு இல்லாமல் திறந்துவிட்டார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்" எனக் கூறியுள்ளார்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web