பெரும் சோகம்... அதிர்ச்சி... 26 வயதில் முன்னாள் உலக அழகி போட்டியாளர் திடீர் மரணம்!

 
ஷெரிகா

26 வயசு தான் ஆச்சு. பெரும் சோகம்...  மாடல் உலகத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், முன்னாள் உலக அழகி போட்டியாளர் ஷெரிகா டி அர்மாஸ், தனது 26 வயதில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

புற்றுநோய்க்காக கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை எடுத்து வந்த ஷெரிகா டி அர்மாஸ், சிகிச்சை பலனளிக்காமல் உயிருக்குப் போராடி இறுதியில் மரணத்தைத் தழுவியுள்ளார். அவரது மரணம் உருகுவே மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


ஷெரிகா டி அர்மாஸ் 2015ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்டார். ஆனால், அவரால் முதல் 30 இடங்களுக்குள் வரமுடியவில்லை. இருப்பினும், அந்த ஆண்டு உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்ட 18 வயதான ஆறு அழகிகளில் ஒருவராக இருந்தார்.

ஷெரிகா

அந்த நேரத்தில் பேட்டி அளித்த ஷெரிகா, "எனக்கு எப்போதும் மாடலாக இருக்கவே ஆசை. பியூட்டி மாடலாகவோ, விளம்பர மாடலாகவோ, கேட்வாக் மாடலாகவோ இருக்கவே விரும்புகிறேன். ஃபேஷன் சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்குப் பிடிக்கும், அழகுப் போட்டியில் எந்தப் பெண்ணின் கனவும் மிஸ் யுனிவர்ஸில் பங்கேற்க வேண்டும் என்பதுதான். சவால்கள் நிறைந்த இந்த அனுபவம் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்தார்.

ஷெரிகா

ஷெரிகா தலைமுடி பராமரிப்பு தொடர்பான பொருட்களையும் விற்பனை செய்யும் ஷே டி அர்மாஸ் ஸ்டுடியோ எனப்படும் நிறுவனத்தை நடத்தினார். கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் பெரெஸ் ஸ்க்ரிமினி அறக்கட்டளையுடன் இணைந்து சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் இருந்து வந்தார். ஷெரிகாவின் மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web