செவ்வாய் கிழமைகளில் நல்ல காரியங்களை செய்யலாமா? என்ன பரிகாரம்?

 
அக்னியை வலம் வரவில்லைஇ என்றால் திருமணம் செல்லாது

இது பல வருடங்களாக நம் மக்களிடையே இருந்து வரும் சந்தேகம். செவ்வாய் கிழமைகளில் நல்ல காரியங்களைச் செய்யலாமா? கூடாதா? என்கிற கேள்விக்கு நம்மில் பலருக்கும் பதில் தெரியாமல் சந்தேகத்துடனேயே செவ்வாய் கிழமைகளைத் தவிர்த்து விடுகிறோம். எந்தவொரு செயலையும் முழு மனதோடு செய்தால், அதற்கான பலன்களும் விரைவாகவும், நிறைவாகவும் கிடைக்கும் என்பது தான் இதற்கான பதில்.

ஆனால், இது பற்றியெல்லாம் யாரிடமும் ஆலோசனை கேட்காமல், முன்னோர்கள் சொல்லி வந்தார்கள் என்று நமக்கு நாமே சமாதானம் கூறி கொண்டு, செவ்வாய்கிழமைகளில் நல்ல விஷயங்களைச் செய்ய தயங்குகிறோம். நாள் கிழமை பார்த்து செய்கிற காரியம் பாதி வெற்றியைத் தரும் என்று பெரியவர்கள் சொன்னது அத்தனையும் சத்தியமான உண்மை தான்.

வாரத்தில் வருகிற எல்லா கிழமைகளும் நல்ல கிழமைகள் தான் என்றாலும் சிலருக்கு வியாழக்கிழமை விசேஷமாக இருக்கிறது. இன்னும் சிலர் வெள்ளிக்கிழமைகளில் தங்களுக்கு பிடித்தமான நல்ல காரியங்களை துவங்குகிறார்கள். ஆனாலும் பெரும்பாலானவர்கள் செவ்வாய்க்கிழமையை காரணம் தெரியாமலேயே தவிர்த்து விடுகிறார்கள். 

செவ்வாய் கிழமைகளில் நல்ல காரியங்களை துவங்கலாமா? என்ன பரிகாரம்?

செவ்வாய்கிழமை அதுவுமா புது புடவை கட்டலாமா? நாளைக்கு கட்டலாமே…. செவ்வாய்க் கிழமையில் போய் புதுசா வேலை செய்யலாமா? வேற நல்ல நாள்ல தொடங்க கூடாதா என்று புது ஆடை உடுத்துவதில் இருந்து, புதிய பொருள்கள் வாங்கும் வரை நாள், கிழமை என்று பார்ப்பவர்களும் உண்டு. எடுத்ததெற்கெல்லாம் இப்படி நாளுங்கிழமையும் பார்க்கலாமா என்று நினைத்ததை, நினைத்தப்படி நடத்திக் கொள்கிறவர்களும் உண்டு. ஜோதிடங்களை முழுமையாக நம்பவில்லை என்றாலும் அவை எல்லாம் விஞ்ஞானத்துடன் தொடர்பு கொண்டவை என்பதை யாராலும் மறுக்க முடியாது .

திங்கள், புதன், வியாழன், வெள்ளி நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஏற்ற நாள் என்று நினைப்பார்கள். அதிலும் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழியை வைத்து புதன்கிழமை மட்டுமே நல்ல நாள் என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால் நல்ல நாளாக இருந்தாலும் பிரதமை, அஷ்டமி, நவமி திதிகள் வரும் நாள்களைத் தவிர்க்க வேண்டும். செவ்வாய்கிழமையும் உகந்த நாள் தான்.

நவக்கிரகங்களுள் மிகச்சிறந்தது செவ்வாய் கிரகம். கிரகங்களில் செவ்வாய் என்பது மங்களகாரகன் என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் என்றாலே மங்களகரமான வார்த்தை என்று முன்னோர்கள் சொல்வார்கள். செவ்வாய்க்கிழமையன்று எதையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழுபலனை அனுபவிக்கவே முடியாது என்றும் சொல்வதுண்டு. முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை தான்.

செவ்வாய் கிழமைகளில் நல்ல காரியங்களை துவங்கலாமா? என்ன பரிகாரம்?

மெளன அங்காரக விரதம் என்று ஒரு வகையான விரதம் உண்டு. தர்மசாஸ்திரத்தில் இதைப் பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று மெளனவிரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை ஒருவர் அடையலாம் என்கிறது. அதாவது செவ்வாய்க்கிழமையன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது. அப்படி விவாதம் செய்தால் அது நிச்சயம் தீமையில் சென்று முடியும். அதனால் தான் செவ்வாயோ வெறும் வாயோ என்று, அன்றைய தினம் வாதம் செய்யாமல் மெளன விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்வது. 

இயற்கையிலேயே செவ்வாய் விசுவாசம் நிறைந்த பணியாளாக இருந்தாலும் மூர்க்க குணம் நிறைந்தவர்.எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதையும் யோசிக்காமல் வேகமாக செயல்படக்கூடியவர். அன்றைய தினம் நாம் செய்யும் செயல்கள் தொடரும் என்பதால் தான் கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பித் தரும் போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும். மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது என்பது முன்னோர்கள் வகுத்து சென்ற பாடம். இந்த நாளில் செவ்வாய் தோஷத்திற்கான பரிகார சாந்தி, துர்கா ஹோமம், ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யும் ஆயுஷ்ய ஹோமம் , சஷ்டி அப்த பூர்த்தி போன்றவற்றைச் செய்யலாம். மனையடி சாஸ்திரம் செவ்வாயன்று பூமி பூஜை செய்வது நல்லது என்றே கூறுகிறது. பயணங்களில் கிழக்கு திசை நோக்கிய பயணம், செவ்வாயன்று இருந்தால் உறுதியான வெற்றியைத் தரும். அதனால் இனி செவ்வாய் கிழமைகளைத் தவிர்த்து விடாமல், எப்படி பயன்படுத்தணுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web