கந்த சஷ்டி விழா தொடங்கியது... நவ.18ம் தேதி சூரசம்ஹாரம்! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

 
திருச்செந்தூர் முருகன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கிய நிலையில், லட்சக்கணக்கில் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். முன்னதாக ரூ.100 கட்டண தரிசனம் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ரூ.2000 வரை உயர்த்தப்பட்டது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா, நேற்று துவங்கிய நிலையில், வரும் நவம்பர் 24ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 18ம் தேதியும், மறுநாள் நவம்பர் 19ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.  நேற்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கும் கந்தசஷ்டி திருவிழாவினையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து முருகனை தரிசித்தனர். 

முருகன்

சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று நவம்பர் 13ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு  யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.

முருகன்

நவம்பர் 18ம் தேதி மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் எழுந்தருளி கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. கந்தசஷ்டியை முன்னிட்டு விரமிருக்கும் பக்தர்கள், திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தங்கியிருக்க வசதியாக கோயில் வளாகத்தில் 21 இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட்டு உள்ளன.  சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்ரையை சுத்தப்படுத்தி, பொக்லைன் மூலம் சமன் செய்யும் பணியும் நடத்தப்பட்டு வருகிறது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web