மாங்கனி திருவிழா.. ஜூன் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
நாளை மறுதினம் ஜூன் 21ம் தேதி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் காரைக்காலில் இயங்கும் அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசு கருவூலங்கள், முக்கிய அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிறிதொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும்.
காரைக்காலில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் புதுச்சேரி, காரைக்கால் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களும் அம்மையார் ஆலயத்தில் வழிபடுவது வழக்கம். அதேபோல் மாங்கனி திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் மாங்கனிகளை எரிந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவர்.
அவ்வாறு செலுத்தினால் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில், இந்த ஆண்டு மாங்கனி திருவிழா ஜூன் 21ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அளிக்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!