நெல்லையப்பர் ஆனித் தேரோட்டம்... ஜூன் 21ம் தேதி பள்ளி, கல்லூரிகள்... அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை... கலெக்டர் உத்தரவு!

 
பள்ளி கல்லூரி விடுமுறை school holiday
ஜூன் 21ம் தேதி நெல்லையப்பர் ஆனித் தேரோட்டத்தையொட்டி அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறை

தமிழகத்தில் அரசு மற்றும் பொது விடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகளுக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், தங்களது மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி  நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு ஜூன்  21ம் தேதி வெள்ளிக்கிழமை நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து நெல்லை மாவட்ட ஆட்சியர்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜூன் 21ம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூன்  29ம் தேதி சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஜூன் 21ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும்  பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் அவசிய பணிகள் காரணமாக அரசு கருவூலம் குறைவான பணியாளர்களை கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web