பேச்சியம்மன் சுடலைமாடசாமி கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

 
பேச்சியம்மன் சுடலை மாடசாமி கோவில்

தூத்துக்குடியில் ஆவுடையார்புரத்தில் பழமை வாய்ந்த கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் ரோட்டில் உள்ள ஆவுடையார்புரத்தில் பழமை வாய்ந்த பேச்சியம்மன் சுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை இடிப்பதற்கு சிலர் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதற்கு தொடர்ந்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கோவிலை இடிக்காமல் தடுத்து நிறுத்த கோரி ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.

தூத்துக்குடி

இந்நிலையில் கோவிலை இடிப்பதற்கு மீண்டும் முயற்சி நடந்ததாக கூறி சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து அந்த கோவிலை சுற்றி நின்று கொண்டு கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவிலை இடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பின்னர் கலந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web