ரூ.100 டிக்கெட் கட்டணம் ரூ.2,000 ஆக உயர்வு... பக்தர்கள் அதிர்ச்சி!

 
முருகன்

தமிழகத்தில் இன்று முருகன் கோவில்களில் சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. போலவே, திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு அதிகாலை 1 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு மாவட்டஙக்ளில் இருந்து சஷ்டி விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.  

முருகன்

சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருன் நவம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது.  அடுத்த நாளான நவம்பர் 19ம் தேதி திருமண வைபவம் நிகழ உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.  இந்நிலையில் கந்த சஷ்டி விழா முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது நாள் வரை நபர் ஒருவருக்கு 500 மற்றும் 2000 என இருந்த அபிஷேக தரிசன கட்டணத்தை தற்போது 3 ஆயிரம் ரூபாயாகவும், 100 ரூபாயாக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் 2000 ரூபாயாகவும், விரைவு தரிசன கட்டணம் ரூ.100 ஆக இருந்தது ரூ.1000 ஆக உயர்த்தியுள்ளனர்.

திருச்செந்தூர் முருகன்

கடந்த 2022ம் ஆண்டு, ஏற்கெனவே இப்படி கட்டணம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சிறப்பு தரிசன கட்டணத்தை திடீரென இன்று திடீரென மீண்டும் எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் உயர்த்தியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web