“அல்மோராவில் அதிர்ச்சி! பள்ளி அருகே 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு ... பாதுகாப்புத்துறை அலர்ட்”
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் அரசு பள்ளி ஒன்றின் அருகே 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது புதர்களில் சந்தேகப் பொருள் பளிச்சென தெரிந்ததை முதல்வர் போலீசாரிடம் தெரிவித்ததும், சில நிமிடங்களில் அங்கு படையெடுத்து வந்த போலீசார் இடத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின் பணியில் இறங்கிய வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மற்றும் நாய் படை, முழுப் பகுதியையும் சோதனை செய்து ஜெலட்டின் குச்சிகளை மீட்டது.
இந்திய வெடிபொருள் சட்டத்தின் கீழ் அடையாளம் தெரியாதவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அல்மோரா எஸ்.எஸ்.பி தேவேந்திர பிஞ்சா உறுதிப்படுத்தினார். “விசாரணை நடைபெற்று வருகிறது, வதந்திகள் பரப்ப வேண்டாம். சரிபார்க்கப்பட்ட தகவல்களை தொடர்ந்து வழங்குவோம்,” என பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார். சாலை கட்டுமானப் பணிகளில் பாறை வெடிப்புக்கு ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்படுவதாகவும், பள்ளி அருகே இவ்வளவு பெரிய அளவில் யார் வைத்தனர் என்பதை கண்டறிவதற்காக நான்கு தனிப்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செங்கோட்டை குண்டுவெடிப்பு மற்றும் ஃபரிதாபாத் பல்கலைக்கழகம் அருகே 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் நாட்டில் பாதுகாப்பு அமைப்புகளை எச்சரிக்கையுடன் இருக்கச் செய்திருந்த நிலையில், அல்மோரா சம்பவம் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. டெல்லி–செங்கோட்டை வழக்கில் மருத்துவர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டதை நினைவூட்டும் வகையில், இச்சம்பவமும் பயங்கரவாத பிணைப்புகளுக்கான சந்தேகத்தை கிளப்பியுள்ளதால், பாதுகாப்புத்துறையினர் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!