மேலும் ஒரு வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை... தொடரும் சோகம்!
மேற்கு வங்காளம் முழுவதும் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையிலே நதியா மாவட்ட கிருஷ்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை ரிங்கு டரப்டர் (54), வாக்குச்சாவடி நிலை அலுவலராக பணியாற்றி வந்தார். தொடர்ச்சியான பணிச்சுமையால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் இன்று வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
‘வாக்குச்சாவடி நிலை அலுவலராக செயல்படாவிட்டால் நிர்வாக ரீதியில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது; இந்த அழுத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்ற கடிதத்தையும் அவர் எழுதி வைத்திருந்தார். தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னரும் ஜல்பாய்குரி மாவட்டத்தை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் சாந்திமோனி, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியின் அழுத்தத்தால் கடந்த 19ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியால் 20க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக முதல்–மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்து, தேர்தல் பணிச்சுமை குறித்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!