கடற்கரையில் கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பம்... வைரலாகும் புகைப்படம்!

 

இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கடற்கரையில் வரையப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பம் வைரலாகி வருகிறது. இந்த சிற்பத்தை ஒடிசாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ரோஜா மலர்களைக் கொண்டு கடந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உருவாக்கியிருந்தார். ஆர் உருவாக்கிய கிறிஸ்துமஸ் தாத்தா உருவம், ஒடிசார் கடற்கரை மணலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

5,400 ரோஜா மலர்களுடன் பிற பூக்களையும் சேர்த்து இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்திருந்தார். கடந்த வருடம் இந்த புகைப்படம் வைரலான நிலையில், இந்த வருடமும் சமூக வலைத்தளங்களில் இந்த சிற்பத்தின் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். 50 அடி நீளமும் 28 அடி அகலமும் கொண்ட இந்த சாண்டா கிளாஸ் சிற்பத்தின் புகைப்படம் காண்பவர் மனதை கொள்ளை கொள்கிறது. 

இது குறித்து பத்மஸ்ரீ விருது வென்ற சர்வதேச மண் சிற்பக்கலை நிபுணர் சுதர்சன் பட்நாயக் கூறுகையில், இந்த மணல் சிற்பம் பெரும் வரவேற்பு பெற்றது மகிழ்ச்சி. மக்களிடையே பெரும் விழிப்புணர்வை கடந்த வருடம் ஏற்படுத்தியது சந்தோஷம் எனத் தெரிவித்துள்ளார்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!