நாய் கடித்துக் குதறியதில் 4 மாத குழந்தை உயிரிழப்பு!
ராட்லர் நாய் கடித்துக் குதறியதில் 4 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத் மாநிலம் ராதே ரெசிடென்சி குடியிருப்பில் இளம்பெண் ஒருவர் தனது 4 மாத பெண் குழந்தை ருஷிகாவை கையில் தூக்கிக் கொண்டு வந்தார். அப்போது ராட்வைலர் நாய் திடீரென குழந்தை மீது பாய்ந்து கடித்து குதறத் தொடங்கியது.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாயை விரட்டி விட்டு குழந்தையை மீட்டு கொடுத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அந்த நாயை அழைத்து வந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே நடந்து வந்தார். இதுதான் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.
ராதே கமர்சியல் மற்றும் ரெசிடென்சி குடியிருப்பு சங்கத்தினர் நாய் கடி சம்பவங்கள் குறித்து இதனால் பலமுறை ஆபத்தான பின் விளைவுகள் குறித்து ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பிறகு அதிகாரிகள் குழந்தையை கடித்துக் நாயை அதிகாரிகள் மீட்டு தற்காலிக தங்கும் இடத்தில் பராமரித்து வருகின்றனர்.பதிவு செய்யாமல் ஆபத்தான இன நாயை கட்டுப்பாடு இன்றி விட்டதற்காக உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!