விசா கிடைக்கல... இளம்பெண் மருத்துவர் தற்கொலை... கதறித் துடித்த பெற்றோர்! 

 
 

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோகிணி (38), குடும்பத்துடன் ஐதராபாத்தின் பத்மாராவ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்த அவர், அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் மருத்துவப் பயிற்சி பெறுவதற்காக ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார்.

விசா தொடர்பான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்காவிற்குச் சென்ற ரோகிணி, விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல மாதங்கள் காத்திருந்தார். ஆனால், அவரின் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால், அமெரிக்காவில் மருத்துவப் பயிற்சி பெற வேண்டும் என்ற அவரது நீண்டநாள் கனவு நொறுங்கியது. மனமுடைந்த அவர் மீண்டும் ஐதராபாத் திரும்பியதாக கூறப்படுகிறது.

நேற்று வீட்டில் தனியாக இருந்த ரோகிணி, அதிகளவில் தூக்குமருந்து அருந்தி மயங்கிய நிலையில் கிடந்தார். இதை அறிந்த அவரது பெற்றோர் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்தபோது, ரோகிணி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.இந்தச் செய்தியை கேட்டு அவரது பெற்றோர் பெரும் துயரத்தில் மூழ்கினர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!